கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை


கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
x

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை

கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). இந்த நிலையில் அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் செல்வம் (29), முருகேசனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவருடன் மாமனார் ராஜப்பா என்கிற பாலகிருஷ்ணன் (59), மனைவி பிரதீபா மற்றும் பிரதீபாவின் சகோதரர் ராகுல் ஆகியோர் உடன் இருந்து தாக்கி உள்ளனர். இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

5 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிர்த்தினா தீர்ப்பு வழங்கினார். இதில் செல்வத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலகிருஷ்ணனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், பிரதீபாவை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ராகுல் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story