வாலிபருக்கு கத்தி குத்து; 2 பேர் கைது


வாலிபருக்கு கத்தி குத்து; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னவேடம்பட்டி பகுதியில் வாலிபருக்கு கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கணபதி

கோவை சின்னவேடம்பட்டி மணிநகரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவா (26) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இது மற்றொரு தரப்பினருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் விக்னேஷிடம் நட்பை கைவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உடையாம்பாளையம் சாலையில் விக்னேஷ் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் விக்னேஷிடம் தகறாறு செய்துள்ளனர். திடீரென அந்த கும்பல் விக்னேசை கத்தியால் குத்தியது.

இதில்அவருக்கு கழுத்து, தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி விக்னேசை கத்தியால் குத்திய சிவானந்தாபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (26), பிரசாத் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story