டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வாலிபர் கைது
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகில் உள்ள நூக்காம்பாடியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதில் மாதலம்பாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 48) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 18-ந் தேதி இரவு சுமார் 11 மணியளவில் வி.நம்மியந்தல் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (32) என்பவர் மதுபோதையில் டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது கடை மூடி இருந்தது.
இதை கண்ட அவர் அங்கிருந்த பேப்பர்களை எடுத்து கடையில் ஷட்டர் அடியில் வைத்து தீ வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த கடையில் உரிமையாளர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். மேலும் இதுகுறித்து அவர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த சிவக்குமார் கடையை திறந்து பார்த்தபோது கடையில் எந்தவித சேதமும் ஏற்பட வில்லை.
தொடர்ந்து சிவக்குமார் இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.