காதலியை பார்ப்பதற்காக பஸ்சை திருடிய வாலிபர்


காதலியை பார்ப்பதற்காக பஸ்சை திருடிய வாலிபர்
x
தினத்தந்தி 13 Sept 2022 12:39 PM IST (Updated: 13 Sept 2022 12:56 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் பஸ்சை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு

இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று இரவு அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண டிப்போவிற்கு சென்றார். மேலும் சிலர் உணவு வாங்கவும் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது, அங்கி நிறுத்தி இருந்த பஸ் காணாமல் போனதை உணர்ந்த டிரைவர் பிலியந்தலை போலீசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கெஸ்பேவ - பிலியந்தலை சந்திக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்த பஸ் செல்வதை கண்ட அதிகாரிகள் பேருந்தை தடுத்து நிறுத்தி தப்பியோட முயன்ற அந்த வாலைபரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அந்த வாலிபர் தெரிவித்தார்.

நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு தனது காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய வாலிபர், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பஸ்கள் இயங்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும் டிப்போவில் நிறுத்தி பஸ்ஸை எடுத்துச்சென்றதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story