ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ரூ.22½ லட்சத்தை பறிகொடுத்த வாலிபர் - போலீசில் புகார்
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ரூ.22½ லட்சத்தை வாலிபர் பறி கொடுத்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து உள்ளார்.
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ரூ.22½ லட்சத்தை வாலிபர் பறி கொடுத்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து உள்ளார்.
ரூ.22½ லட்சம் மோசடி
மதுரை மாவட்டம் சிந்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது30). பட்டதாரியான இவர் முகநூல் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, ஆன்லைனில் தொழில் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாகக்கூறியுள்ளனர்.
மேலும் ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், பல்வேறு தவணைகளில் ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் லாபம் எதுவும் கிடைக்கவில்லை.
போலீசில் புகார்
இதனை தொடர்ந்து, அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, மீண்டும் குறிப்பிட்ட தொகை அனுப்பினால்தான் லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ் இதுதொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.