அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர்கள் சிக்கினர்


அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர்கள் சிக்கினர்
x

அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர்கள் சிக்கினர்.

திருச்சி

விரட்டி பிடித்தனர்

திருச்சி மதுரைரோடு சிங்காரத்தோப்பு பஸ் நிறுத்தம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நேற்று இரவு 2 வாலிபர்கள் கையில் அரிவாளுடன் சுற்றி திரிந்தனர். அவர்கள் அங்கிருந்த ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர்.

ஆனால் அவர் செல்போனை தர மறுத்ததால் அரிவாளால் அவரது கையில் வெட்டிவிட்டு செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றனர். சத்தம் கேட்டு அங்கு நின்று பேசி கொண்டு இருந்த சில வாலிபர்கள் அரிவாளுடன் வந்த 2 பேரையும் விரட்டி பிடித்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். உடனடியாக இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று, அவர்கள் யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?. இதில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிதுநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story