அத்தனூர் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு


அத்தனூர் அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 July 2023 12:30 AM IST (Updated: 29 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே அத்தனூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, வளையல் மாலை அணிவிப்பு, ஹோம பூஜை நடந்தது. அம்மனுக்கு வளையல் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை தலைவர் ஆடிட்டர் நடராஜன் உள்பட கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை வைத்தனர்.

தொடர்ச்சியாக உற்சவர் அலங்காரம், மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா தீபாராதனை செய்து அம்மன் தேரில் அமர்ந்து வீதிஉலா நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அத்தனூர் அம்மன் கோவில் நிர்வாக அலுவலர் சிவகாமி குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் விழியன் குல அறக்கட்டளையின் கவுரவ தலைவர் அம்மன் கிரானைட்ஸ் முத்துராமசாமி, தலைவர் ஆடிட்டர் நடராஜன், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் பெரியசாமி, எக்ஸல் நடேசன், சங்ககிரி மணி, முன்னாள் தலைவர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் முத்துலிங்கம், ராமசாமி, சண்முகம், குமார், முத்துக்குமார், ராஜா, அம்மன் மணி, கோடீஸ்வரன், சேகர், ஆறுமுகம், கர்த்தார் அண்ணாதுரை உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story