கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை


கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை
x

அவினாசி அருகே கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை ரூ.10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் ெகாள்ளையடித்து சென்றனர்.

திருப்பூர்

அவினாசி அருகே கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை ரூ.10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் ெகாள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அண்ணன்மார் கோவில்

அவினாசியை அடுத்த முத்து செடிபாளையத்தில் பழமைவாய்ந்த அண்ணன்மார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (27) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். இந்த சாமியை தரிசனம் செய்ய சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் தங்களது காணிக்கையை செலுத்த வசதியாக கோவில் முன்பு உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே கோவிலுக்கு பூசாரி வந்து பார்த்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கோவில் கதவு திறந்து இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. இதையடுத்து உண்டியலை தேடி பார்த்தபோது புதருக்குள் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல் கிடந்தது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.10 ஆயிரம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். கோவிலுக்கு வந்த ஆசாமிகள், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை பெயர்த்து எடுத்து அதை உடைத்து பணத்தை மட்டும் எடுத்து விட்டு, உண்டியலை புதருக்குள் தூக்கி வீசி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story