மல்லசமுத்திரத்தில், பலத்த பாதுகாப்புடன் நடந்த அழகுராய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா போலீசாருடன் ஒரு பிரிவினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

மல்லசமுத்திரத்தில், பலத்த பாதுகாப்புடன் நடந்த  அழகுராய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா   போலீசாருடன் ஒரு பிரிவினர் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
x

மல்லசமுத்திரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழகுராய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் ஒரு பிரிவினர் போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

மல்லசமுத்திரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழகுராய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதில் ஒரு பிரிவினர் போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் சோழீஸ்வரர், அழகுராய பெருமாள், செல்லாண்டியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆனி மூல தேர்த்திருவிழா நேற்று பல்வேறு சர்சைகளுக்கு இடையே தொடங்கியது. இரு சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு, அனைத்து சமூக மக்கள் தேர் இழுக்க கோரிக்கை, அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இடையே ேதர்த்திருவிழா நடந்தது.

முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மேற்பார்வையில் 4 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

தள்ளுமுள்ளு

திருவிழா தொடங்கி சாமிக்கு பூஜை, வழிபாடு நடந்தது. அப்போது ஒரு சமூக மக்களை போலீசார் கோவிலுக்குள் இருக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடுப்பு அமைத்து தேரோட்டத்தை கண்காணித்தனர். தேரோட்டத்தின்போது ஒரு பிரிவினர் தேரை வடம்பிடித்து இழுத்ததாக கூறி மற்றொரு பிரிவினர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும், ஒரு பிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் காயம் அடைந்ததாக தெரிகிறது. எனினும் பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்த்திருவிழா நிறைவடைந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story