நாமக்கல் கவராநகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா
நாமக்கல் கவராநகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா
நாமக்கல் என்.கொசவம்பட்டி கவராநகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பம்பை, செண்டை மேளம் முழங்க தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மாலையில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
விழாவையொட்டி வருகிற 18-ந் தேதி குழந்தைகளுக்கான போட்டியும், 20-ந் தேதி நடனபோட்டியும் நடைபெற உள்ளது. 21-ந் தேதி திருத்தேர் பூட்டுதல் நிகழ்ச்சியும், அன்று மதியம் திருத்தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 22-ந் தேதி அம்மன் குதிரை வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், பெண்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி அம்மன் தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.