வேப்பனப்பள்ளியில் கனமழைக்கு சிவன் கோவில் இடிந்து விழுந்தது பக்தர்கள் அதிர்ச்சி


வேப்பனப்பள்ளியில்  கனமழைக்கு சிவன் கோவில் இடிந்து விழுந்தது  பக்தர்கள் அதிர்ச்சி
x

வேப்பனப்பள்ளியில் கனமழைக்கு பழமைவாய்ந்த சிவன் கோவில் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளியில் கனமழைக்கு பழமைவாய்ந்த சிவன் கோவில் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவன் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகர மைய பகுதியில் கிருஷ்ணகிரி- வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பழமை வாய்ந்த சிவன் கோவிலின் சுற்றுச்சுவர் மழைநீரில் நனைந்து வலுவிழந்து காணப்பட்டது.

பக்தர்கள் அதிர்ச்சி

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளியில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது சிவன் கோவிலின் சுவர் திடீரென கனமழைக்கு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இரவு நேரம் என்பதால் கோவிலுக்கு யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவன் கோவில் முழுவதும் இடிந்து விழுந்து கிடப்பதை கண்ட அப்பகுதி பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் கோவிலுக்கு புதிய சுவர் கட்டுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர். கனமழைக்கு சிவன் கோவில் இடிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Next Story