காரகுப்பம் ஊராட்சி வீரபத்ரசாமி சாமி கோவில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரகுப்பம் ஊராட்சி  வீரபத்ரசாமி சாமி கோவில் திருவிழா  தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

காரகுப்பம் ஊராட்சி வீரபத்ரசாமி சாமி கோவில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி எர்கெட் கொல்லகொட்டாய் கிராமத்தில் ஸ்ரீ வீரபத்ரசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் குறும்பர், குருமான்ஸ் பழங்குடி இன மக்களின் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. இவர்களின் குல தெய்வங்களான சின்ன தொட்டண்ணா, தொட்ட தொட்டண்ணா, வீரபத்திர சாமி லக்கம்மா, லிங்கம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் கோலாட்டம், சேவாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் விரதம் இருந்து குடும்பத்துடன் குலதெய்வத்தை வழிபட்டனர். இதில் எர்கெட் கொல்லகொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story