பள்ளிபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா


பள்ளிபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி சவுடேஸ்வரி அம்மன் சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற கோலாட்ட ஊர்வலம் நடைபெற்றது.

கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் ராஜவீதி, சின்ன வீதி, பஜனை கோவில் தெரு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. மேலும் ஜோதி ஊர்வமும் நடைபெற்றது. ஜோதி ஊர்வலத்திற்கு முன்னால் வீரகுமாரர்கள் கத்தி போட்டுக் கொண்டு சென்றனர். இன்று(செவ்வாய்க்கிழமை) அம்மனின் புஷ்ப அலங்கார ஊர்வலம் நடைபெறுகிறது.


Next Story