விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா


விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
x

திருப்பூரில் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி நேற்று புதிய கொடிமரம் நடும் விழா நடைபெற்றது.

திருப்பூர்

திருப்பூரில் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி நேற்று புதிய கொடிமரம் நடும் விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

திருப்பூரில் நல்லூர் பகுதியில் விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி கும்பாபிஷேக நடைபெற இருக்கிறது. விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசன்ம் 4-ம் கால யாக பூஜை, திரவ்யாஹீதி நிகழ்ச்சிகளும், காலை 4.45 மணிக்கு மகா பூர்ணாஹீதி, தீபாராதனை நிகழ்ச்சிகளும், 5 மணிக்கு உடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் காலை 5.30 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வேஸ்வரசுவாமி கோவில் விமானம் மற்றும் ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 5.45 மணிக்கு மூலாலய மகா கும்பாபிேஷகமும் நடைபெற இருக்கிறது. இதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மகாபிஷேகம், தீபாரதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா வருதல், பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்று காலை முதல் அன்னதானம் நடைபெற இருக்கிறது.

விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் திேனஷ்குமார், சுப்பராயன் எம்.பி. உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

புதிய கொடிமரம்

இந்த கோவிலில் கடந்த 11-ந்தேதி உரிய அனுமதியுடன் சேதமடைந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று மதியம் புதிதாக கொடிமரம் நடும் விழா நடைபெற்றது. இதில் துணை ஆணையர் (சரிபார்ப்பு) ரமேஷ், செயல் அலுவலர் வெ.பி.சீனிவாசன், நகை மதிப்பீட்டு வல்லுனர் ஜீவானந்தம், இன்ஸ்பெக்டர் கணபதி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.எஸ்.நாச்சிமுத்து, பொறியாளர் சிவக்குமார், கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி கோவிலின் முன்பகுதியில் யாக சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுர கலசங்களும் தயார்நிலையில் உள்ளது.


Related Tags :
Next Story