பங்குனி மாத அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல்:
பங்குனி மாத அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அமாவாசை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பங்குனி மாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் பரமத்தி அங்காளம்மன், பரமத்திவேலூர் மாரியம்மன், பழைய பை-பாஸ் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன், பேட்டை புதுமாரியாம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், ராஜாசுவாமி கோவிலில் உள்ள அம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாமகிரிப்பேட்டை
நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வழிபாடு நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவில், ஒடுவன்குறிச்சி காளியம்மன் கோவில், ஆர்.புதுப்பட்டி சூடாமணி அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களில் சாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






