மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல்
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கும்ப பூஜை, 108 திரவிய பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story