பிலிக்கல்பாளையம் அருகே விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது


பிலிக்கல்பாளையம் அருகே விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பிலிக்கல்பாளையம் அருகே உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேர்த்திருவிழா

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றதுடன் தொடங்கியது. இதையொட்டி விஜயகிரி பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 4-ந் தேதி வரை யானை, குதிரை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக சாமி திருவீதி உலா நடக்கிறது. மேலும் திருக்கல்யாணம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் உத்திர நட்சத்திரத்தில் விஜயகிரி ஆண்டவர் தேரில் எழுந்தருள உள்ளார். மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

சத்தாபரணம்

6-ந் தேதி சத்தாபரணம், கொடி இறக்குதலும், 7-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story