ராமநவமியையொட்டி பரவாசுதேவ பெருமாள் திருவீதி உலா


ராமநவமியையொட்டி பரவாசுதேவ பெருமாள் திருவீதி உலா
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசதேவ பெருமாள் கோவிலில் ராமநவமி விழாவையொட்டி சாமி திருக்கல்யாணம் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு ஆகம விதிப்படி திருக்கல்யாணம் உற்சவம் மற்றும் உபகார பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை அழைப்பு நடைபெற்றது இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story