கெலமங்கலத்தில்பசவேஸ்வர சாமி ஜெயந்தி விழா
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
கெலமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பசவேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீர சைவ ஜங்கம் சேவா சங்கம் சார்பில் பசவேஸ்வர சாமி ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு பல்லக்கில் பசவேஸ்வர சாமி ஊர்வலமாக கெலமங்கலம் நகரத்தில் முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கெலமங்கலம், சின்னட்டி, செட்டிப்பள்ளி, ஜி.பி., ஜே.கார்பள்ளி மற்றும் சுற்றுப்புற மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story