தளி தொட்ட எல்லம்மா தேவி கோவிலில்கரக உற்சவ விழா


தளி தொட்ட எல்லம்மா தேவி கோவிலில்கரக உற்சவ விழா
x
தினத்தந்தி 27 April 2023 12:30 AM IST (Updated: 27 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தளி சாலையில் கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் தொட்ட எல்லம்மா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கரக உற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கயது. சாமிக்கு கணபதி ஹோமம், சண்டி ஹோமம், ராகு, கேது ஹோமம், சிறப்பு அபிேஷகம், முனீஸ்வர சாமிக்கு மாவிளக்கு, தொட்ட எல்லம்மா தேவி, மத்துாரம்மா தேவி, சிக்க எல்லம்மா தேவி, நஞ்சப்பா சுவாமி, கரகதம்மா, காவேரம்மா ஆகிய சாமிகளுக்கு மாவிளக்கு பூஜை, தீ மிதித்தல் ஆகியவை நடந்தன.

விழாவில் நேற்று சிடி கம்பத்திற்கு மலர் அலங்காரம், மதியம் பரசுராம சிடி உற்சவம், தொட்ட எல்லம்மா தேவிக்கு மலர் அலங்காரம் நடந்தது. தொட்ட எல்லம்மா தேவிவை வழிபட்டு குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் தங்களுக்கு பிறந்த குழந்தையை கோவிலில் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீளமான கம்பின் ஒருபுறம் இருந்த தொட்டிலில் அமர வைத்து சுற்றி வர செய்தனர். இளைஞர்கள் கம்பை இழுத்து சென்று சுற்றி வந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு பல்லக்கு உற்சவமும், கரக உற்சவமும் நடந்தது.


Next Story