பாலக்கோடு அருகே புள்ள முனியப்பன் கோவில் திருவிழா
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோட்டை அடுத்த கல்கூடஅள்ளியில் உள்ள புள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடந்தது. கல்கூடஅள்ளி, சின்ன செட்டிப்பட்டி, எம்.செட்டிஅள்ளி, காவேரியப்பன்கொட்டாய், குப்பன்கொட்டாய், எருது கூடஅள்ளி, பாகிமரத்துகொட்டாய், சென்னப்பன்கொட்டாய் உள்ளிட்ட 9 கிராமங்களை சேர்ந்த பங்காளிகள் ஒன்றிணைந்து முனியப்பன் சாமிக்கு முப்பூசை செய்து விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து முனியப்பன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Next Story