பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளி சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், நெய் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனையும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.

தொடர்ந்து ஈஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாணீஸ்வரர் கோவில்

அரூர் கடைவீதியில் வாணீஸ்வரி சமேத வாணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வாணீஸ்வரி சமேத வாணீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா சென்றார்.

இதேபோல் அரூர் பஸ் நிலையம் அருகே உள்ள வர்ணீஸ்வரர் கோவில் உள்பட தர்மபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், மாரணடஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story