திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

புலிமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

தஞ்சாவூர்

மெலட்டூர்;

பாபநாசம் தாலுகா, புலிமங்கலம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை பக்தர்கள் கரகம், காவடி எடுத்து வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை புலிமங்கலம் கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story