கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளிமண்டு மாரியம்மன் கோவில் திருவிழா


கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளிமண்டு மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 25 May 2023 12:30 AM IST (Updated: 25 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் உள்ள மண்டு மாரியம்மன் கோவிலில், 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தின்னக்கழனி, பனந்தோப்பு, காமராஜர் நகர், தாளாப்பள்ளி, துரிஞ்சிப்பட்டி, கல்லகுறி, புதூர், கட்டிகானப்பள்ளி, வடுக்கம்பட்டி உள்ளிட்ட 32 கிராம மக்கள் இணைந்து மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகள் கொரோனாவால் திருவிழாவை நடத்தவில்லை. தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திருவிழா நடந்தது.

நேற்று மாலை அம்மன் கரகத்துடனும், கிராம தெய்வங்களை புஷ்ப பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். 32 கிராமங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். 9 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்ததால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story