சாரங்கபாணி கோவில் தேரோட்டம்


சாரங்கபாணி கோவில் தேரோட்டம்
x

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சாரங்கபாணி கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமாகும். இங்கு பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனும் தமிழ்ப்பாடல் தொகுப்பு கிடைக்க பெற்றதுமான தலமாக இக்கோவில் கருதப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.

தேரோட்டம்

அதன்படி கடந்த 7-ந் தேதி தைப்பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தைப்பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

1 More update

Next Story