லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான கோவில் எழுத்தர் பணியிடை நீக்கம்
லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான கோவில் எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவர் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வரும் காந்தி நகரை சேர்ந்த சிங்காரத்திடம்(45) தொடர்ந்து கடையை நடத்த உரிமம் வழங்க வரி ரசீது போட்டு கொடுப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். அதனை சிங்காரத்திடம் இருந்து பெற்றபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ரவி மீது துறைரீதியான நடவடிக்கையாக, அவரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறையின் பெரம்பலூர் உதவி ஆணையரும், கோவில் தக்காருமான லெட்சுமணன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story