காசிவிஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாஇன்று நடக்கிறது


காசிவிஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாஇன்று நடக்கிறது
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை அருகே மேலநத்தம் காசிவிஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

திருவாரூர்

திருமக்கோட்டை அருகே மேலநத்தம் காசிவிஸ்வநாதர், முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

காசிவிஸ்வநாதர் கோவில்

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே மேலநத்தம் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு விசாலாட்சி அம்மன், முத்து மாரியம்மன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.

பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் கிராமத்தினர் மற்றும் திருவிழா கமிட்டி சார்பில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பணிகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக நடந்து வந்தன.

திருப்பணி வேலைகள்

மேலநத்தம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டு சிங்கப்பூரில் வசித்து வரும் உறவினர்கள் மூலமாக கொடுத்த நிதியை கொண்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன.

மேலும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு ஊரில் திருவிழா கமிட்டி அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

யாகசாலை பூஜைகள்

இதை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக கோவிலில் யாகசாலை பூைஜகள் நடந்து வருகின்றன. இதன் முடிவில் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. யாகசாலை பூஜையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story