ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ஓசூரில்  கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, சர்வ தரிசன நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை, காந்தபாளையம் சீந்தல் மடாலயம் ஆதி சிவலிங்காச்சாரிய சுவாமிகள், சிவராஜ ஞானாச்சாரியார் சுவாமிகள், இளைய பட்டம் ஞானசேகரன் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாவும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத், ஜெய்சங்கர், ஆறுமுகம், பரம்பரை பூசாரி ஸ்ரீதர் உள்பட பலர் செய்து இருந்தனர்.


Next Story