கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

கோபி அருகே பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் வகையறாவை சேர்ந்தது பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி ஆதிநாராயண பெருமாள் கோவில். இந்த கோவில் புனரமைப்பு பணி நடந்து வந்தது. பணி முடிவடைந்ததை தொடர்ந்து 10-ந் தேதி மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடந்தது. 11-ந் தேதி வாஸ்துசாந்தியும், 12-ந் தேதி சாற்றுமுறையும் நடந்தது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று காலை 4-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் மகா கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து மூலவர் விமானம், ராஜகோபுரம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயண பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அங்குள்ள அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் கோபி கூகலூர், கொங்கர்பாளையம், காசிபாளையம், குன்னத்தூர், குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story