கோனேரி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
கோனேரி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் சிங்கார வீதியில் வீதியில் புதிதாக கோனேரி பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 11 அடி உயரம் கொண்ட அபய வரத ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக விழாவுக்காக காசி, ராமேஸ்வரம்., ஸ்ரீரங்கம், தாமிரபரணி, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மேல் வேத விற்பன்னர்கள் கோவில் கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள். இந்த விழாவில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உள்பட அந்தியூர், தவிட்டுபாளையம், புதுப்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், வெள்ளையம்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
Related Tags :
Next Story