குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி
சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. சனீஸ்வரரின் உடனுறை நீலாதேவிக்கு உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து அந்த கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டி மணமுடிக்கும் வைபவம் நடந்தது.
இதில், தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர். முடிவில் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story