மாரியம்மன் கோவில் விழா


மாரியம்மன் கோவில் விழா
x

சாமிசெட்டிப்பட்டியில் மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி பூ சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் ஊர் முனியப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தன. இதில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story