கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Feb 2023 2:15 AM IST (Updated: 26 Feb 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த பால்குட ஊர்வலம் திண்டுக்கல் பெரியகடை வீதியில் உள்ள நாடார் பேட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக சென்று கோட்டை மாரியம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் அங்கு கோட்டை மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவில் முன்மண்டபத்தில், மாதர் சங்கம் சார்பில் மாக்கோலம், பூக்கோலமிடப்பட்டது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் காப்பு, பூஜை, நெய்வேத்தியம் ஆகியவை நடத்தப்பட்டன. அதன்பிறகு பக்தர்களுக்கு படையல் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவில் கலையரங்கில் நண்பர்கள் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், உதவி செயலாளர் ரவீந்திரன், மாதர் சங்க தலைவி அல்லிராணி பாண்டியராஜ், செயலாளர் கற்பகம் ஜெகதீசன், பொருளாளர் வித்யாவதி ஜனார்த்தனன் மற்றும் கல்யாணி சோமசுந்தரம் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story