காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோவிலில் திருவிழா; பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் பிரசித்திபெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை முல்லைப்பெரியாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அம்மனுக்கு சந்தனம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். திருவிழாவில் நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story