திண்டுக்கல் மவுன்ஸ்புரம் உச்சிமாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
திண்டுக்கல் மவுன்ஸ்புரம் உச்சிமாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல் மவுன்ஸ்புரத்தில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு திருமாங்கல்யம் கட்டுதல், சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் மின்தேர் பவனி நடந்தது. அதையொட்டி சிறப்பு அலங்காரம், தீபாராதணை மற்றும் 16 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. மேலும் யானைத்தெப்பத்தில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்.
இதையொட்டி நேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொழில் அதிபர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் தொழில் அதிபர்கள் ரெத்தினம், நடராஜன், முகமதுகனி, சுப்பிரமணி, கால்பந்து கழக செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர். திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சாம்பசிவம், ராமமூர்த்தி, குருநாதன், பாலன், சரவணன் உள்பட பலர் செய்து வருகின்றனர்.