அபிமுக்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


அபிமுக்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அபிமுக்தீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சி புழுதிக்குடி கிராமத்தில் உள்ள ஆனந்தவள்ளி சமேத அபிமுக்தீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடந்தது. இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று 4-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த உடன் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசங்களில் புனித நீரை ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story