உத்தராபதீஸ்வரர் கோவிலில் செண்பகப்பூ திருவிழா


உத்தராபதீஸ்வரர் கோவிலில் செண்பகப்பூ திருவிழா
x
தினத்தந்தி 12 May 2023 12:45 AM IST (Updated: 12 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

உத்தராபதீஸ்வரர் கோவிலில் செண்பகப்பூ திருவிழா கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடியில் உள்ள உத்தராபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமுது படையல் விழாவும, அதைத்தொடர்ந்து செண்பகப்பூ திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இதில் செண்பகப்பூ திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை முன்னிட்டு சாமி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாயரட்சை தீபாராதனையும், சர்க்கரை பொங்கல் பாவாடை நிவேதனமும் நடைபெற்றது. நள்ளிரவில் வடக்கு வீதியில் ஐயடிகள் காடவர்கோன் மகாராஜாவுக்கு, சாமி செண்பகப்பூ வாசனையுடன் காட்சி கொடுத்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபாநடேஸ்வர சுவாமிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story