தி.வடுகபட்டியில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா


தி.வடுகபட்டியில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 2 July 2023 2:30 AM IST (Updated: 2 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கோபால்பட்டி அருகே தி.வடுகபட்டியில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகே தி.வடுகபட்டியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் கடந்த 20-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பொங்கல் வைத்தல், பால்குட ஊர்வலம், மாவிளக்கு எடுத்து வருதல், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு, அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.


Related Tags :
Next Story