கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம்
சோளிங்கரில் கோவில் திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
சோளிங்கர் கோலாத்தம்மன் கோவில் ஆடி மாத திருவிழா ஆலோசனை கூட்டம் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் பாரதி தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வரவேற்றார்.
திருவிழா அமைதியாக நடக்க வேண்டும். பேனர்கள் வைக்கக்கூடாது. பில்லாஞ்சி கிராம மக்கள் பகல் 2 மணிக்கும், தோப்புப் பகுதி மக்கள் 3 மணிக்கும், மார்கெட் பகுதி மக்கள் மாலை 4 மணிக்கும், சோமசமுத்திரம் கிராம மக்கள் 5 மணிக்கும் சாமி ஊர்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் பாரதி கூறினார். அதைத்தொடர்ந்து பொது மக்களின் கருத்தும் கேட்கப்பட்டது.
இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story