கோவில் திருவிழா - அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி...!


கோவில் திருவிழா - அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி...!
x
தினத்தந்தி 9 Jun 2022 9:09 AM GMT (Updated: 2022-06-10T11:54:44+05:30)

வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் அரிவாள்கள் மீது நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அடைக்கனூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் வைகாசி மாதம் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் அம்மன் கரகம் பாலித்து கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

இன்று மதியம் கோவில் பூசாரி அம்மையப்பன் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்தார். அப்போது தப்பாட்டத்திற்கு ஏற்றவாறு அவர் அருள் வந்து ஆடினர்.

பின்னர், அருகிலிருந்த பக்தர்கள் நீளமான 2 அரிவாள்களை எடுத்து இருபக்கமும் பிடித்துக்கொண்டனர். அதன் மீது பூசாரி அம்மையப்பன் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

இதனையடுத்து ஆணிகள் அடிக்கப்பட்டு இருந்த செருப்பை அணிந்துகொண்டும் அருள்வாக்கு கூறினார். அப்போது அங்கு இருந்த பக்தர்களுக்கு திருநீறு மற்றும் எலுமிச்சை பழங்களை பிரசாதங்கள் வழங்கினார்.

இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story