சியாமளா காளியம்மன் கோவில் திருவிழா


சியாமளா காளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 4 July 2023 2:36 AM IST (Updated: 4 July 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி சியாமளா காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி சியாமளாதேவி காளியம்மன் கோவில் காவடி பால்குட திருவிழா நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வீதி உலா நடைபெற்றது. நேற்று அரசலாற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம், பிரம்பாண்ட அலகு காவடி, முளைப்பாரி, எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story