பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவிழா
பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவிழா நடந்தது.
திருவெண்காடு;
திருவெண்காடு அருகே பார்த்தன்பள்ளி கிராமத்தில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒரு கோவிலாக உள்ளது. அர்ஜுனனுக்கு இந்த பெருமாள் ஞான உபதேசம் செய்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. மேலும் அகத்தியர் இங்கு தங்கி பெருமாளை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சாட்சியாக அகத்தியருக்கு தனி சன்னதி இந்த கோவிலில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருமாள் சரஸ்வதி அலங்காரம் மற்றும் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பட்டாபிராமன் பட்டாச்சாரியார், கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.