காத்தாயி அம்மன் கோவில் வைகாசி திருவிழா


காத்தாயி அம்மன் கோவில் வைகாசி திருவிழா
x

திருவாரூர் காத்தாயி அம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் நாலுகால் மண்டபம் அருகே காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா யாகபூஜையுடன் நேற்று தொடங்கியது. விழாவையொட்டி கமலாலய குளத்தில் இருந்து பால் குடம் ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மதியம் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, மேள தாள இன்னிசை நிகழ்ச்சியுடன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.


Next Story