செல்லப்பெருமாள் அய்யனார் கோவில் குடமுழுக்கு
திருவலஞ்சுழி செல்லப்பெருமாள் அய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவாரூர்
ஆலத்தம்பாடி, ஜன.28-
திருத்துறைப்பூண்டி அருக திருவலஞ்சுழி தகரவெளி கிராமத்தில் முஸ்தகலா செல்லப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் உலக நன்மை வேண்டியும் ,விவசாயம் செழிக்க வேண்டியும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பூஜை செய்தனர். தொடர்ந்து 91 வகையான மூலிகை கலந்த புனித நீர் கலசத்தில் இருந்து எடுத்துவரப்பட்டு ஆலயத்தை சுற்றி வந்து கோபுரத்தில் உள்ள கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story