அய்யனார், வீரன் கோவிலில் மகா அபிஷேக வழிபாடு


அய்யனார், வீரன் கோவிலில் மகா அபிஷேக வழிபாடு
x

பிளாஞ்சேரி அய்யனார், வீரன் கோவிலில் மகா அபிஷேக வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரி கிராமத்தில் வனப்பகுதிக்குள் பழமையான பிரசித்தி பெற்ற அய்யனார், வீரன், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. நேற்று பிளாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காட்டுப் பகுதியில் அமைந்துள்ள பழமையான பிரசித்தி பெற்ற அய்யனார், வீரன், பாப்பாத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக பூஜைகளை பிலாஞ்சேரி கைலாசநாதர் கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். முன்னதாக பிளாஞ்சேரியில் அமைந்துள்ள சித்தி விநாயகர், பச்சைக்காளி, பவளக்காளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story