அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு
மன்னார்குடி விழல்கார தெரு அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவாரூர்
மன்னார்குடி;
மன்னார்குடி விழல்காரதெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாைல பூஜைகள் நடைபெற்று பூர்ணா ஹூதியும் தீபாராதனையும் நடந்தது.பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள குடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்து கோபுரகலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினர். பின்னர் அங்காளம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அங்காளம்மன் காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மன்னார்குடி விழல்கார தெரு அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
Related Tags :
Next Story