தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக விழா


தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக விழா
x

அய்யம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக விழா நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை.;

அய்யம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருமஞ்சன வீதி குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து கோவிலை அடைந்தனர். அங்கு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சாமி மயில் வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story