சுவாமிநாத சாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர்
கபிஸ்தலம்;
சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. அறுபடை வீடுகளில் 4-வது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை சாமிநாத சாமி கோவில் ஆகும். நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலில், வசந்த மண்டபத்தில் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சாமி எழுந்தருள, பால், தயிர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்கின்றனர்.
Related Tags :
Next Story