கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x

ஆறுமுகம்பட்டி தங்கம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி தங்கம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலையில் சிறப்பு பூஜைகள், மாலையில் முதலாம்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 2-ம் நாள் காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

3-ம் நாள் காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் விமானத்துக்கும், அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story