தாராபுரம் காடு அனுமந்தராயர்சாமி கோவில் மற்றும் லட்சுமி நாராயண சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 13.12 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.

தாராபுரம் காடு அனுமந்தராயர்சாமி கோவில் மற்றும் லட்சுமி நாராயண சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 13.12 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.
x

தாராபுரம் காடு அனுமந்தராயர்சாமி கோவில் மற்றும் லட்சுமி நாராயண சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 13.12 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரம் காடு அனுமந்தராயர்சாமி கோவில் மற்றும் லட்சுமி நாராயண சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 13.12 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

தாராபுரம் காடுஅனுமந்தராயர்சாமி கோவிலுக்கு சொந்தமான 10.98 ஏக்கர் நிலம், கோனார்புரம் லட்சுமி நாராயண சாமி கோவிலுக்கு சொந்தமான 2.14 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. அதை மீட்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் நிலத்தை மீட்க திருப்பூர் மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வருவாய் நீதிமன்றத்தில் கோவிலுக்கு சாதமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

மீட்பு

இதையடுத்து திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரையின் படியும், திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி, ஆலய நிலங்கள் தனி தாசில்தார் மகேஸ்வரன், கோவில்அறங்காவலர் குழு தலைவர் கி.குருராஜன், தாராபுரம் சரக ஆய்வாளர் ஆதிரை, செயல்அலுவலர் தி.மல்லிகா, கோவில் பணியாளர்கள் கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையில் கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஆக்கிரமிப்பாளர்கள் ஒப்புகொண்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்படி 13 ஏக்கர் 12 சென்ட் கோவிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது.

சுவாதீனம் பெறப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடி ஆகும்.

Related Tags :
Next Story